அமெரிக்காவும், சீனாவும் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு தலா 50 பில்லியன் டொலர் அளவுக்கு கூடுதல் வரி விதித்து உள்ளன. இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவும், சீனாவும் வர்த்தகப்போரில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இரு நாடுகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு தலா 50 பில்லியன் டொலர் அளவுக்கு கூடுதல் வரி விதித்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய இந்த மோதல் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 பில்லியன் டொலர் அளவுக்கு அமெரிக்கா வரிவிதித்து உள்ள நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 60 பில்லியன் டொலர் அளவுக்கு புதிய வரி விகிதத்தை சீனா அறிவித்து உள்ளது.இந்த புதிய வரிவிதிப்பு நடைமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான வர்த்தக மோதலை தீவிரப்படுத்தினாலும் இதை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள போதிலும் அவர் அதற்கான காலத்தைப்பற்றி அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது