144
அக்கறைபற்று – பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். விபத்தில் 34 வயதுடைய தாயும் அவருடைய 6 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அத்துடன் 11 வயதுடைய மகன் மற்றும் 12 வயதுடைய மகள் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியில் தாய், அவரது இருமகள்மார் மற்றும் மகனுடன் சென்றுகொண்டிருந்த போது அவ் வீதியால் சென்ற காரொன்று அவர்கள் நால்வர் மீதும் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love