சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) தின் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக குரோசியா அணியின் தலைவர் லூகா மோட்ரிக் (LukaModric ) கும் சிறந்த வீராங்கனையாக பிரேசிலை சேர்ந்த மார்ரா(Marta ) வும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்து சிறந்த வீரருக்கான விருதை வழங்கி வருகின்ற நிலையில் 2018-ம் ஆண்டிற்கான விருதை வழங்குவதற்காக 5 முறை பிபாவின் சிறந்த வீரர் விருது பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, லிவபர்பூல் அணிக்காக 43 கோல்கள் அடித்துள்ள முகமது சலா மற்றும் லூகா மோட்ரிக் ஆகிய மூவரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், ரொனால்டோ மற்றும் முகமது சலா ஆகியோரை பின்னுக்கு தள்ளி 33 வயதான லூகா மோட்ரிச் 2018-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரஸ்யாவில் நடைபெற்ற உலக் கிண்ண கால்பந்து போட்டியில் முதல்முறையாக குரோசியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியமைக்கு அணித்தலைவராக மோட்ரிக்கின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தமையினால் அவருக்கு தங்க கால்பந்து விருதும் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை பிரேசிலை சேர்ந்த மார்ரா என்பவருக்கு சிறந்த வீராங்கனைக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.