ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரின் பிரதான அமர்வு இலங்கை நேரப்படி இன்று (25) பிற்பகல் நியூயோர்க் நகரிலுள்ள ஐ நா தலைமையகத்தில் ஆரம்பமானது. முழு உலகும் எதிர்பார்த்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வருட பொதுச்சபை கூட்டத்தொடர் “ஐக்கிய நாடுகள் சபையை சகல மக்களுக்கும் அணுகச் செய்தல், நீதியும் அமைதியும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகத்திற்கான உலகளாவிய தலைமைத்துவத்தின் ஒன்றிணைந்த பொறுப்பு” எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது.
இந்த பிரதான அமர்வில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அரச தலைவர்களுடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் இணைந்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இலங்கை நேரப்படி நாளை 26 அதிகாலை 1.30 மணியளவில் மாநாட்டின் தனது விசேட உரையை ஆற்றவுள்ளார். இது ஜனாதிபதி அவர்கள் ஐ நா பொதுச்சபை கூட்டத்தொடரில் உரையாற்றும் நான்காவது சந்தர்ப்பமாகும்.