219
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றின் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 252 ஒட்டங்களை பெற்றது.
இதனையடுத்து 253 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 252 ஓட்டங்களையே பெற்றதனால் போட்டி வெற்றிதோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.போட்டியின் ஆட்டநாயகனாக மொஹமட் ஷஹ்சாத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
Spread the love