சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லாப்வென் (Stefan Löfven) மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதனையடுத்து அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார். நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நேற்றையதினம் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் தீர்மானத்துக்கு ஆதரவாக 204 வாக்குகளும் எதிராக 142 வாக்குகளும் கிடைக்கப்பபெற்றதனையடுத்து . நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியது. இதனால் பிரதமர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
புதிய பிரதமராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் நாளை வியாழக்கிழமை பேச்சு நடத்தவுள்ளார். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஸ்டீபன் லாப்வென், இடைக்கால பிரதமராக இருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.