ஈராக்கில் மனித உரிமை பெண் செயற்பாட்டாளரான சௌதா அல் அலி (Suad al-Ali ) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் இடம்பெற்று வரும் பாஸ்ரா நகரத்தில் இந்த சம்பவமானது இடம்பெற்றுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காணொளியில், சௌதா அல் அலி ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகே தனது வாகனத்தில் ஏறும் போது இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்படுவதாக காணப்படுகின்றது. ஈராக்கில் ஊழலை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி பாஸ்ரா நகரில் தொடர்ந்து போராட்டம் இடம் பெற்று வருகின்றது என்பதும் ; இந்தப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப்படையினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில பலர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.