பாரிஸில் நான்காவது மாடி பல்கனியில் தொங்கிய குழந்தை ஒன்றின் தந்தைக்கு 3 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குழந்தையின் தந்தை முறையாக குழந்தையை பராமரிக்கவில்லை என்று கூறிய நீதிமன்றம், அவர் பெற்றோர் கடமைக்கான பயிற்சி எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் மேற்தளத்தில் தொங்கிக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை மாலி நாட்டைச் சேர்ந்த அகதியான 22 வயதுடைய மமூது கசாமா (Mamoudou Gassama )என்பவர் ஸ்பைடர் மான் பாணியில் கட்டிடத்தின் முன்புறத்துச் சுவரை பிடித்தபடி சிலந்தி பூச்சி போன்று மேலே ஏறிக் காப்பாற்றியிருந்தார். குழந்தையைக் காப்பாற்றியமைக்காக அவருக்கு பிரான்ஸ் குடியுரிமையை ஜனாதிபதி இமானுவேல் மக்ரன் வழங்கியிருந்தார்.
இந்தநிலையில் மாடியில் தொஙகிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையின் தந்தைக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது