195
ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருக்காவிட்டால் எரிபொருட்களின் விலைகள் உயர்வடைந்திருக்காது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் ஐ.நா பொதுச் சபை அமர்வில் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் அதிகரித்துச் செல்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தமை தொடர்பிலேயே மக்ரோன் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
ட்ரம்ப் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறி ஒரு முடிவுக்கு வருவாராயின் ஈரான் மசகு எண்ணெய்யை விற்பனை செய்யும் எனவும் அதனூடக எரிபொருட்களின் விலைகள் தொடர்பாக ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவித்த மக்ரோன் இதுவே பொருளாதார யதார்த்தம் எனவும் தெரிவித்துள்ளார்.
Spread the love