அனைவருக்கும் அகன்ற அலைவரிசை சேவை வழங்குவதை நோக்கமாக கொண்ட புதிய தொலைத்தொடர்பு கொள்கைக்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, 2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய தொலைத்தொடர்பு கொள்கை நடைமுறையில் உள்ளநிலையில், நவீன மாற்றங்களுக்கு ஏற்ப புதிய தொலைத்தொடர்பு கொள்கையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
இதற்கு தேசிய டிஜிட்டல் தொடர்பு கொள்கை-2018 எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில் அதனை தொலைத்தொடர்பு ஆணையகத்தின் பெயரை ‘டிஜிட்டல் தொடர்பு ஆணையம்’ என மாற்றவும் ; வகை செய்யப்பட்டு உள்ளது.
இந்த கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கையின் முக்கிய நோக்கம், 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து குடிமக்களுக்கும் அகன்ற அலைவரிசை சேவை வழங்குவது ஆகும் என மத்திய அமைச்சர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார். மேலும், டிஜிட்டல் தொடர்பு துறையில் 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் இதன்மூலம், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், டிஜிட்டல் துறையின் பங்களிப்பு 8 சதவீதமாக உயர்த்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துறையில் 720 கோடி முதலீடு ஈர்க்கப்படும். அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் 2020-ம் ஆண்டுக்குள் ஒரு ஜி.பி. திறன்கொண்ட அகன்ற அலை வரிசை சேவையும், 2022-ம் ஆண்டுக்குள் 10 ஜி.பி. திறன்கொண்ட அகன்ற அலைவரிசை சேவையும் வழங்கப்படும் வும் அமைச்சர் மனோஜ் சின்கா எனத் தெரிவித்துள்ளார்.