நாட்டில் எவ்வித பொருளாதார நெருக்கடிகள் வந்தாலும் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியினை ஒருபோதும் குறைக்கப்போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலில் நேற்றைதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்தாண்டு கல்விக்கான நிதி ஒதுக்கீட்டினை அதிகரிக்குமாறு தான் செய்யுமாறு நிதியமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தாய்லாந்து, வியட்னாம் போன்று முழுமையான ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.