ஆண் பெண்ணுக்கிடையிலான தவறான உறவு குற்றம் அல்ல எனவும் இதில் தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு 497 அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஊச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் இந்திய தண்டனை சட்டம் 597-வது பிரிவில் தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்கிறது எனவும் பெண்ணுக்கும் சமமான தண்டனை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தனர். இதன்போது ஆணுக்கு மட்டும் 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கும் 597-வது பிரிவு ரத்து செய்யப் படுவதாகவும் தகாத உறவு குற்றம் இல்லை எனவும் தீர்ப்பளித்துள்ளனர்.
கணவர் என்பவர் பெண்ணின் எஜமானர் அல்ல. ஆணுக்கு பெண் சமம். இதில் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விரோதம் ஆகும். ஆணுக்கு சமமாக பெண்களையும் நடத்த வேண்டும். இதில் பாகுபாடு காட்டுவது சட்ட விதிமீறல் ஆகும் எனத் தீர்ப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கணவன்-மனைவி இடையே விவாகரத்து நடக்க தகாத உறவு காரணமாகிறது எனவும் தகாத உறவு விஷயத்தில் அதில் யாரும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் அது குற்றம் இல்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள் தகாத உறவில் விவாகரத்து நடக்கலாம். யாரும் தற்கொலைக்கு தூண்டப்படக்கூடாது எனவும் தெரிவித்தனர்.
திருமணமான பெண் கணவருடன் மட்டுமல்ல, வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தால் அது குற்றம் இல்லை. மேற்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் தகாத உறவு குற்றம் இல்லை. எனவே ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் 597-வது பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது.அது ரத்து செய்யப்படுகிறது எனவும் தீர்;ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது