அவுஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஜோஸ் ஹசில்வுட் (Josh Hazlewood) , மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) ஆகியோர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியா டெஸ்ட் அணியின் தலைவராக இருந்த ஸ்டீவ் சுமித்தும், துணைத் தலைவராக இருந்த டேவிட் வார்னரும் தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டினையடுத்து இருவருக்கும் தலா ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது.
இதனையடுத்து அணியின் தலைவராக டிம் பெய்ன் நியமிக்கப்பட்ட போதும் ஆனால் துணைத்தலைவராக யாரும் நியமிக்கப்படவில்லை.
இந்தநிலையில் அடுத்த மாதம் அவுஸ்ரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில் இந்த தொடருக்கான அவுஸ்திரேலியா அணியின் துணைத்தலைவர்களாக வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வூட் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.