அஞ்சலோ மத்தியூஸ் ஓட்டங்களை பெறுவதற்காக விக்கெட்டுக்கிடையில் ஓடுவதற்கு சிரமப்படுவதனாலேயே அவரை ஒரு நாள் அணியிலிருந்து நீக்கியதாக என இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க தெரிவித்துள்ளார். மத்தியூஸ் அணித்தலைவர் பதவியிலிருந்தும் ஒரு நாள் அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே ஹதுருசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் மத்தியூஸ் ஓட்டங்களை பெறுவதற்காக சிரமப்படுகின்றார் எனவும் அவரால் ஏனைய வீரர்களும் ரன் அவுட் ஆகும் நிலை காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள ஹதுருசிங்க மத்தியூஸ் தான் ரன்அவுட் ஆவதுடன் ஏனைய வீரர்களையும் ரன் அவுட்டாகும் நிலையையும் ஏற்படுத்துகின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்தியூஸ் எத்தனை தரம் ரன் அவுட்டானார் என்பதை பட்டியலிட்டுள்ள ஹத்துருசிங்க மத்தியூசுடன் ஓடும்போது தாங்கள் ஆட்டமிழந்து விடுவோமா என சகவீரர்கள் கருதுகின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மத்தியூஸ் உடற்தகுதி பெறவேண்டும் என தாங்கள் விரும்புவதாக தெரிவித்த ஹத்துருசிங்க 2017 ற்கு பின்னர் மத்தியூசின் சராசரி 57 என்பதும் தென்னாபிரிக்காவிற்கு எதிராக அவர் 97 ஓட்டங்களை பெற்றார் என்பதும் தங்களுக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.