ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கழக அணிகளுக்கிடையில் நடைபெறும் சம்பியன்ஸ் லீக் தொடர் கடந்த வாரம் ஆரம்பமாகியிருந்தது. இதில் ‘எச்’ பிரிவில் இடம் பிடித்துள்ள இத்தாலியின் யுவான்டஸ் அணி ஸ்பெயினின் வாலென்சியா அணியுடன் போட்டியிட்ட போது யுவான்டஸ் அணியின் சார்பில் விளையாடிய கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு சிகப்பு அட்டை வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தார். ரொனால்டோ இல்லாமல் யுவான்டஸ் 10 வீரர்களுடன் விளையாடிய வெற்றி பெற்றிருந்தது.
இதனையடுத்து ரொனால்டோவுக்கு ஒரு போட்டியில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதனால் அடுத்து இடம்பெறவுள்ள யங் போய்ஸ் அணியுடன்னா போட்டியில் விளையாட மாட்டார். எனினும் அதற்கு அடுத்து நடைபெறவுள்ள மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கெரான போட்டியில் ரொனால்டோ விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.