ரெஸ்லா கார் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான எலன் மஸ்க் (Elon Musk) பங்குச் சந்தை மோசடி செய்துள்ளதாக தெரிவித்து அவர் மீது அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ரெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை திரும்பப்பெற்று, அந்நிறுவனத்தை முழுதும் தனியார் நிறுவனமாக மாற்றும் அளவுக்கு தன்னிடம் போதுமான நிதி உள்ளதாக எலான் மஸ்க் கூறியது பொய்யானதும் தவறாக வழிநடத்திய செயல் எனவும் அமெரிக்க நிதிக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
பங்குகளை வாங்க தம்மிடம் உள்ள நிதி ஆதாரம் உள்ளிட்டவற்றை அவர் தெரிவிக்கவில்லை எனவும் அமெரிக்க நிதிக் கட்டுப்பாட்டு அமைப்பு எலன் மஸ்க்மீது குற்றம் சுமத்தியுள்ளது.