177
சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருத்தல் என்பதை விழிப்புணர்வாக கொண்டு பொதுமக்கள் பெரும் சிரமதானம் ஒன்றினை இன்று (28) மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை காவல்துறை எல்லைக்குட்பட்ட அராலி சந்தியில் இருந்து குறிகட்டுவான் வரை குறித்த சிரமதானம் முன்னெடுக்கப்படுவதுடன் அதிகளவான பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.
இச்சிரமதானத்தில் டெங்கு ஒழிப்பின் முக்கியத்துவம் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் ஊர்காவற்றுறை கிராம சேவகர் பிரிவு இராணுவத்தினர் ஊர்காவற்றுறை காவல்துறையினர்; ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Spread the love