Home இலங்கை அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட மொஹமட் நிஸாம்டீன் பிணையில் விடுதலை…..

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட மொஹமட் நிஸாம்டீன் பிணையில் விடுதலை…..

by admin

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பிரஜையான 25 வயதுடைய மொஹமட் நிஸாம்டீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிட்னி கென்சிங்டனில் உள்ள NSW பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிக்கொண்டு இருந்த இவர் , ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் சார்பாக  அவுஸ்திரேலியாவின் முன்னணி ஆளுமைகளைப் படுகொலை செய்தல், பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிடுதல், தகவல்களை ஆவணப்படுத்தல், அதனுடனான  ஈடுபாடு, பயங்கரவாத நடவடிக்கைக்கு  உதவுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்மீது சுமத்தப்பட்டன. இதன் அடிப்படையில்   கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி…

பயங்கரவாத குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சிட்னியில் கைது….

Aug 31, 2018 @ 05:45

குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக சிட்னியில் இருந்து – K.S.N.K

பயங்கரவாத  செயற்பாட்டுடன் தொடர்பு சந்தேகத்தில்  அவுஸ்திரேலியாவில் இலங்கையர்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பயங்கரவாத குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை ஒருவர் நேற்றையதினம் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன. மொஹமட் நிஸாம்டீன் என்னும்  25 வயதுடைய   இளைஞர் ஒருவரே   அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய மாணவர் விசா செப்டம்பர் மாதம் காலாவதியாக உள்ளதாகவும், சிட்னியிலுள்ள கென்சிங்டனில் உள்ள NSW பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிக்கொண்டு இருப்பவர் எனவும், இலங்கை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கு வைக்கப்பட்டுள்ள நபர்கள், இடங்களின் பெயர்கள் உள்ளிட்டவை அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டு புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டு இருந்ததாக  சிட்னியின் பயங்கரவாத எதிர்ப்பு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை காலை ஜெட்லண்டில் உள்ள ஒரு பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது   ஏராளமான மின்னணு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிடுதல், தகவல்களை ஆவணப்படுத்தல், அதனுடனான  ஈடுபாடு, பயங்கரவாத நடவடிக்கைக்கு  உதவுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்மீது சுமத்தப்பட்டுள்ளன.

அவர் இன்று  வெள்ளிக்கிழமை Waverley  உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது  பிணையில்  செல்ல நீதிமன்றம் மறுத்துள்ளதுடன் விசாரணைக்காக  தடுத்து வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

இந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தீவிரமானவையாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் இருப்பதாகவும்,    அவுஸ்திரேலிய சமஸ்டி  காவற்துறையின் துப்பறியும் அதிகாரி மைக்கேல் மெக்டெர்ரன் தெரிவித்துள்ளார். எனினும்  கைது செய்யப்பட்டவருக்கு எதிராக எவ்வித பயங்கரவாத குற்றச்சாட்டுக்களும் இதற்கு முன்னர் சுமத்தப்படவில்லை  எனவும்  அதற்கான பதிவுகள்  fகாணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The accused is a staff member at the University of NSW.

 

 

 

Nizamdeen was set to face Waverley Court today.

Nizamdeen was set to face Waverley Court today. (Supplied)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More