குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார மேம்பாட்டை கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் கைத்தொலைபேசி திருத்தும் பயிற்சி நெறி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.கடந்த 22.09.2018 இல் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயிற்சி நெறியில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பத்து பயிற்சிகைள பெறுகின்றனர்.
சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் முறையான தொழில் வாய்ப்பின்றி மிகவும் நெருக்கடியான வாழ்க்கையினை வாழந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் பிள்ளைகளுடன் வாழும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எனவே இவ்வாறானவர்கள் இது போன்ற வருமானம் தருகின்ற தொழில் பயிற்சினை வழங்குவது மிகவும் பொருத்தமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது