இறுதி யுத்தத்தின் கடைசி இரண்டு வாரங்களில் விடுதலைப்புலிகள் சென்னையிலிருந்தோ அல்லது வேறு ஏதோவொரு காட்டுப்பகுதியில் இருந்தே கொழும்பின் மீது விமானதாக்குதலை மேற்கொண்டு கொழும்பை அழிக்க திட்டமிட்டிருந்தனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விமான தாக்குதல் குறித்த அச்சம் காரணமாக அனைவரும் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டனர் எனவும் தான் அவ்வவேளையில் பிரதி பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தவேளையில் தானும் கொழும்பில் தங்கியிருக்கவில்லை எனவும் கொழும்பிற்கு வெளியே பல இடங்களில் தங்கியிருந்ததாகவும் அந்தநேரத்தில் கொழும்பு பாதுகாப்பற்றதாக விளங்கியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதி யுத்தத்தை நடத்தியது தானே எனவும் அவ்வேளை ஏனைய அனைத்து தலைவர்களும் ஓடி ஒளித்துக்கொண்டிருந்தார்கள் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
2 comments
ஐ நா சபையில் சர்வதேசத் தலைவர்கள்
முன்னிலையில் திரு. மைத்திரிபால சிறிசேன கெஞ்சாத
குறையாக ஏன் கூழைக் கும்பிடு போட்டார், என்பதற்கான
காரணத்தை அவர் அமெரிக்காவிலேயே உளறிவிட்டார்?
அவரது நோக்கமும், ராஜபக்ஷர்களைப் போன்று தன்னைப்
பாதுகாத்துக் கொள்வதையே நோக்காகக் கொண்டிருந்ததேயன்றி
இராணுவத்தினர் மீது கொண்ட கரிசனையினாலல்ல, என்பதை
இராணுவத்தினரும், நாட்டு மக்களும் என்றாவது ஒருநாள்
புரிந்துகொள்ளவார்கள்?
காலம் கனிந்து வரும்வரை காத்திருப்பதைவிட, வேறு
தெரிவேதும் எமக்கில்லை. நம்புவோம்,
இறைவன் நின்று கொல்வான்!
இறுதி யுத்தத்தைத் தானே நடாத்தியதாகக் கூறும் திரு. மைத்திரிபால சிறிசேன, போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட மே 2009 ல் இருந்து 2015 ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களிலோ அன்றித் தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப் பட்ட ஜனவரி 2015 ல் இருந்து நேற்று (25/09/2018) வரையான காலத்திலோ கூறாத ஒரு புதுக் கதையை இப்பொழுது அவிழ்த்து விடுவதன் நோக்கம்தான் என்ன?
அமெரிக்கக் காற்றில், இதமான பஞ்சணையில் அழகான கனவு கண்டிருப்பாரோ? திரு. கோத்தபாய ராஜபக்ஷ உட்பட, ராஜபக்ஷர்களும், இராணுவ அதிகாரிகளும், ‘போர் வெற்றிக்கான உரிமை தமதே’, எனப் பௌத்த விகாரைகள்தோறும் ஏறித் தம்மைப் பலப்படுத்திக் கொள்ளும்போதெல்லாம் இவர் எங்கிருந்தார்? போரின் இறுதி நாட்களில் திரு. கோத்தபாய ராஜபக்ஷ இலங்கையிலேயே இருந்தார் என்பதை, அவர் கூறுவது போன்றே பலரும் நம்புகின்றார்கள். அவர் கொழும்பில் இருந்தாரா, என்பது வேறு விடயம்.
ஆக, தனது பதவிக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில், திரு. மைத்திரிபால சிறிசேன, எல்லாவற்றுக்கும் சூளுரைப்பதாகக் கூறிப் பொய்யுரைக்கின்றார், என்பதே உண்மையாகும்.
பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போல, ‘ஜனாதிபதி’, என்னும் அதிகாரபலமிக்க கதிரையில் இருக்கும் ஜனாதிபதி, தான் பொய்யுரைத்தால் அதை மெய்யென நம்பச் சுய சிந்தனையற்ற மக்கள் கூட்டமொன்று இருப்பதாக அவர் கனவு காணுகின்றார்போலும்? எல்லோரையும் எல்லாக் காலங்களிலும் ஏமாற்றிவிட முடியாது, என்பதை என்றுதான் உணர்வாரோ?