உலகின் மிகப்பெரிய மீன்சந்தையான சுகிஜி மீன்சந்தை(tsukiji fish market) கடந்த 83 ஆண்டுகளில் முதன்முறையாக எதிர்வரும் ஒக்டோபர் 6ம் திகதி மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . சுகிஜி மீன்சந்தையிலிருந்து 3.4 கி.மீ. தொலைவில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள டோயோசு தீவுக்கு மீன் வியாபாரிகள் இடம்பெயரவுள்ளதனால் இன்று வெள்ளிக்கிழமை இரவு அவர்கள் வெளியேறுவதற்கான இறுதி நாளாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்னும் ஒருவாரத்தில் டோயோசு தீவில் திறக்கப்பட உள்ள மீன்சந்தையில் கடைகளுக்கான இடவசதிகளை அதிகரிப்பதோடு நவீன வசதிகள், பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. 1923ல் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் காரணமாக ஏற்கனவே இருந்த இச்சந்தை அழிவடைந்தநிலையில் மீண்டும் உருவாக்கப்பட்டு தற்போதைய இடத்தில் 1935லிருந்து இயங்க ஆரம்பித்திருந்தது
ஜப்பானிய கடல் உணவுகளின் மெக்கா என அழைக்கப்படும் சுகிஜி மீன் நச்தை பார்வையாளர்கள் மற்றும் வியாபாரிகளை ஈர்ப்பதற்கான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நவீன உத்திகளோடு வரும் ஒக்டோபர் 11 ம்திகதியிலிருந்து டோயோசு சந்தையில் இயங்கவுள்ளமை குறிப்பிடதத்க்கது.