இலங்கை பிரதான செய்திகள்

திருமணமான காலம் முதல், கணவர் செந்தூரனின் கொடுமைகளுக்கு, போதநாயகி உட்பட்டிருந்தார்…..


போதநாயகி திருமணமான காலம் முதல் அவர்களுடைய குடும்பத்தில் பல பிரச்சினைகள் இடம்பெற்று வந்தது அவருடைய கணவன் செந்தூரன் என்பவரால் பல கொடுமைகளுக்கு அவர் உட்பட்டிருந்தார் என போதநாயகியின் தாயார் திருமதி நடராஜா தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின், மரணம் தற்கொலையாயின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கிழக்கு பல்கலை.திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் தொழிகள் திணைக்களத்தினர் நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்தப் பொராட்டத்தில் கலந்துகொண்ட போதநாயகியின் தாயார் தொடர்ந்து கருத்து தெரிவித்த போது, போதநாயகியின் மரணம் தொடர்பாக கேள்வியுற்ற அவரின் கணவன் செந்தூரன் மரணம் குறித்து அதிர்ச்சி அடையாமல் சதாரணமாக திருகோணமலைக்கு சென்றார் எனவும், சடலத்தை தனது வீட்டில் வைக்க வேண்டும் என முரண்பட்டு இறுதி கிரியைக்கும் சமூகமளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இப் போராட்டத்தில் கலந்துகொண்ட தொடர்பாடல் மற்றும் மொழிகள் திணைக்களத்தினரின் தலைவர் கலாநிதி வி.ஜே.நவீன்ராஜ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், உயிரிழந்த போதநாயகி தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது கண்டறியப்பட வேண்டும். ஒருவேளை அது தற்கொலை என்று கூறப்பட்டால் அவரை தற்கொலைக்கு தூண்டியவர் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். அல்லது கொலையாயின் கொலைக்கு காரணம் எது யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதிகோரி போராட்டம்

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.