சுமார் 5 கோடி முகப்புத்தக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 கோடி பேரின் கணக்குகள் பாதுகாப்பற்று இருப்பதாகவும் முகப்புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது. முகப்புத்தக பயனாளர்களின் கணக்குகள் செயல்படும் முறையில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு இருந்ததை கண்டுபிடித்துள்ளதாகவும் இந்த பாதுகாப்பு குறைபாட்டினால் சுமார் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் முகப்புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 25-ம் திகதி இது தொடர்பில் கண்டறிப்பட்டதாகவும் தற்போது இந்த பிரச்சனையை சரி செய்யும் பணிகளில் நிபுணர்கள் குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளதெனவும் முகப்புத்தக நிறுவம் தெரிவித்துள்ளது. முகப்புத்தகத்தில் உள்ள சிறப்பு அம்சமான வியூ அஸ்(view as ) எனும் வசதி இந்த பாதுகாப்பு குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டதெனவும் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
தகவல் திருட்டால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் மீண்டும் லொக்கின் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர் எனவும் மீண்டும் லொக்கின் செய்ய வலியுறுத்தப்பட்ட பயன்பாட்டாளர்கள் தங்களது கடவுச்சொற்களை மாற்றவேண்டிய தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் எந்த பகுதியில் உள்ள பயனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது