195
நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான ஆங்கில இலக்கிய பாட பயிற்சிப்பட்டறை யாழில். கடந்த 22ஆம் மற்றும் 23ஆம் திகதி பிரிட்டிஷ் கவுன்சிலால் நடத்தப்பட்டது.
பிரிட்டிஷ் கவுன்சிலில் சேவையாற்றும் ஆசிரியரான மிக் சட்வின் என்பவரால் கவிதை, நாடகம், நாவல், சிறுகதை எனும் நான்கு பிரிவுகளாக நிகழ்த்தப்பட்ட குறித்த பயிற்சிப் பட்டறையில் 142 மாணவர்கள் பங்கு பற்றி இருந்தனர்.இம்முறை யாழ் மாவட்டம் உள்ளடங்கலாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் குறித்த பயிற்சிப்பட்டறை தமக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்ததுடன் ,பிரிட்டிஷ் கவுன்சிலின் முயற்சியினை பாராட்டியதுடன் இதுபோன்ற செயல் அரங்குகளை மேலும் தொடர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.குறித்த பயிற்சிப் பட்டறையானது , யாழில் இம்முறை ஐந்தாவது தடவையாக நடத்தப்பட்டமை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love