காசா எல்லை பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதல்களில் 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாலஸ்தீனத்தில் 1948-ம் ஆண்டு நடந்த போருக்கு பின்னர் அகதிகளாக சென்றவர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஆனால் இதனை இஸ்ரேல் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதனால் பாலஸ்தீனியர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், காசா எல்லை பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதல்களில் 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலியாகி உள்ளதாக இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
12 வயதான நாசர் மோசாபிஹ் என்ற சிறுவனும், தெற்கு காசா பகுதியில் உள்ள கான்யூனிஸ் பகுதியிலும், 14 வயதான முகமது அல் ஹூம் என்ற மற்றொரு சிறுவனும் அல்புரேஜ் என்ற இடத்திலும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 210 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.