2
அமெரிக்கா வட கொரியா மீது தொடர்ந்து தடைகளை விதித்து வரும் சூழ்நிலையில், தங்களிடம் உள்ள ஆயுதங்களை கைவிடுவதற்கு வாய்ப்பேயில்லை என அந்நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர் ரி யோங்-ஹோ (Ri Yong-ho) எச்சரிக்கை விடுத்துள்ளார். வட கொரியா மீது விதிக்கப்பட்டு வரும் தொடர் தடைகள் அமெரிக்கா மீதான அவநம்பிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது எனவும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் ரி யோங்-ஹோ தெரிவித்துள்ளார்.
தம் மீது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகள் விலக்கப்பட வேண்டுமென்று வட கொரியா தொடர்ந்து வலியுறுத்தி வரும் வட கொரியாவின் கருத்துக்கு ஆதரவாக ரஸ்யாவும் சீனாவும் ஆதரவாக உள்ளன.
எனினும் வட கொரியா அணு ஆயுதங்களை கைவிட்டால்தான் அதன் மீதான தடைகள் விலக்கப்படுமென டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து கூறி வருகிறது.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய ரி யோங்-ஹோ அணுஆயுத கைவிடலுக்கு முன்னிலை என்ற அமெரிக்காவின் வற்புறுத்தல் கலந்த அணுகுமுறை தடைகளின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்மைய முட்டுக்கட்டைக்கு நம்பகத்தன்மையை வேரோடு அளிக்கும் அமெரிக்காவின் நிர்பந்தப்படுத்தும் அணுகுமுறையே காரணம் எனவும் அவர் மெதரிவித்துள்ளார்.