திருப்பதியில் மருத்துவர் ஒருவர் உட்பட 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கம் காணப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 பேர் திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளித்த போதும் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் உதவி மருத்துவ பேராசிரியராக பணியாற்றி வரும் ஒரு மருத்துவருக்கும் பன்றி காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் திருப்பதியில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.