இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 91 ஆயிரம் மக்களுக்கு உடனடி உதவி தேவைப்படுவதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் அண்மையில் ரிக்டர் அளவில் 7.5 அளவில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதனையடுத்து சுனாமியும் தாக்கியதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது .
மேலும் இந்த இயற்கை பேரழிவுகளால் இந்தோனேசியாவில். பல கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பேரழிவுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட ஐ.நா சபை, இந்தோனேசியாவில் 1 லட்சத்து 91 ஆயிரம் மக்களுக்கு உடனடி உதவி தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளது