இயற்கை சீற்றத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள சும்பா எனும் தீவில் 40 கிலோ மீற்றர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் 5.9 ரிக்டர் அளவில் ; ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் அந்த தீவில் வசித்து வரும் நிலையில், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை 7.5 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதனையடுத்து சுனாமி தாக்கியதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதுடன் பல கோடி பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்திருந்தன.இதேவேளை தேவாலயம் ஒன்றின் இடிபாடுகளில் சிக்கியிருந்த மாணவர்கள் 36 பேரின் சடலங்களை மீட்புக்குழுவினர் இன்று மீட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது