கடலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து தீவிரவாதி ஒருவரை கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதனையடுத்து சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் கேப்பர் குவாரி மலையில் உள்ள கடலூர் மத்திய சிறைச் சாலையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என சுமார் 1,500-க்கும் மேற் பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சென்னையைச் சேர்ந்த 29 வயதான அன்சர் மீரான் என்பவர் சிரியாவில் செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதர வாக செயல்பட்டதாக தெரிவித்து கடந்த பெப்ரவரி மாதம் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சென்னை புழல்சிறை யில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இவர் கடலூர் மத்திய சிறை சாலைக்கு மாற்றப் பட்ட நிலையில் இவரை சிறைச்சாலையை தகர்த்து கடத்திச் செல்ல தீவிரவாதி கள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்ததனையடுத்து இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.