கருணாஸ் உள்ளிட்ட 4 சட்;டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய சட்டப்பேரவைத்தலைவர் தனபால் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக அரசையும், தமிழக முதல்வரையும் கடுமையாக விமர்சித்தமைக்காக கருணாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
எனினும் கருணாஸ் தொடர்ந்து அரசை விமர்சித்து வருகின்ற நிலையில் இரட்டை இலை சின்னத்தில் வென்று சட்டமன்ற உறுப்பினராகிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார்.
அவரது முறைப்பாட்டினை ஏற்ற சட்டப்பேரவை தலைவர் தனபால் முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சா p உள்ளிட்ட சிரேஸ்ட அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதுடன் குறித்த முறைப்பாடு குறித்து கருணாஸிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கருணாஸ் மட்டுமல்லாமல் டிடிவி தினகரன் அணியில் உள்ள மேலும் நான்னு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்ப அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற வட்டார தகவல் தெரிவிக்கிறது.
இவர்களுக்கு குறித்த கால இடைவெளிக்குள் பதிலளிக்க கடிதம் அனுப்பப்படும் எனவும் அவர்கள் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து சட்டப்பேரவை தலைவர் முடிவெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.