156
ga
நீதிமன்றத்தை அவமதித்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசாரர் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் அவருக்கு, வெளியில் இருந்து உணவைக் கொண்டு வருவதற்கான அனுமதிக் கோரப்பட்டுள்ளது.
ஞானசாரருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அவரது உடல் நல பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பொதுபல சேனா அமைப்பு நேற்றைய தினம் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றஞ்சாட்டுக்காக அவருக்கு 6 வருடங்கள் கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love