55 வருடங்களில் முதன்முறையாக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த டோனா ஸ்டிரிக்லாண்ட் என்பவருக்கே இவ்வாறு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1903ஆம் ஆண்டு மேரி கியூரியும், 1963ஆம் ஆண்டு மரியா கோபெர்ட் மேயரும் இயற்பியலுக்கான நோபல் பரிசை பெற்ற பெண்கள் ஆவர்.
டோனாவுடன் அமெரிக்காவை சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின் மற்றும் பிரான்சைச் சேர்ந்த ஜெரால்ட் மொரூ ஆகியோரும் இந்த பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.சீரொளி இயற்பியல் துறையில் இவர்கள் ஆற்றிய பணிக்காக இவர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் புற்று நோய் சிகிச்சைக் புதுமையான சிகிச்சை முறையை உருவாக்கியதற்காக அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பி அல்லிசன் மற்றும் ஜப்பானை சேர்ந்த டசூகு ஹோஞ்சோ ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது