டெல்லியில் இன்று முதல்மைச்சர் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு, துப்புரவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு டெல்லி மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தற்காலிக துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 12-ம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற அவர்கள் இன்று முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
துப்புரவு பணியாளர்கள் சம்பளம் தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இரண்டு நாட்களுக்குள் 500 கோடி ரூபாய் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்படும் என மாநில அரசு தெரிவித்தன்மூலம் பிரச்சினையை தீர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது