சீல் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோரின் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 12ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த இருவரும் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதிமன்றம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
2015ம் ஆண்டு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி சீல் துணிகளை விநியோகம் செய்தமை தொடர்பில் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோர் மீது குற்றம்சுமத்தப்பட்டு இருவருக்கும் 3 வருடட கடூழியச் சிறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.