முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆதிசிவனுக்கும், ஐயனாருக்கும், கிராமத்து மக்களும் இளைஞர்களும் இணைந்து பொங்கல் பொங்கி வழிபாடு மேற்கொண்டுள்ளனர். இன்றையதினம் இடம்பெற்ற இந்த வழிபாட்டு நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் கலந்துகொண்டுள்ளார்.
இந்த மலைப்பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் விகாரை ஒன்றினை அமைக்கும் நோக்குடன் கடந்த செப்ரம்பர் 4ம் திகதி அன்று பௌத்த துறவிகள் உள்ளிட்ட குழுவினர் பயணம் மேற்கொண்டுடிருந்த நிலையில் பிரதேச இளைஞர்களால் குறித்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு இடம்பெறுவதோடு பாரம்பரியமாக வழிபாடு நடத்திய மக்கள் வழிபாடுகளில் ஈடுபட நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.