அரசியல் கைதிகளின் உண்ணவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களது விடுதலையை வலியுறுத்தியும் இன்று (5) மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. மக்கள் பிரதிநிதிகளும் பொது அமைப்புக்களும் இணைந்து பேரணியில் ஈடுபட்டுள்ளதுடன் மாவட்ட செயலகத்தில் மகஜர் ஒன்றையும் கையனித்துள்ளனர்.
அரசியல் கைதிகாளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் மிக நீண்டகாலமாக வழக்குகள் தொடரப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளளர். புலதடவைகள் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக ஏனைய சிறைகளில் உள்வர்களும் தற்போது உண்ணாவிதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நல்லாட்சி அரசு உடனடியாக அவர்களுக்கு எதிராக வழக்குகளை தொடுத்தோ அல்லது புனர்வாழ்வளித்தோ அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கோரி இப்போராட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது