கனமழை காரணமாக தமிழகத்தி;ன் தென் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடித்து வரும் குமரி மாவட்ட மீனவர்கள் கரைதிரும்பி வருகின்ற போதிலும் , கேரளா, லட்சத்தீவில் தங்கி மீன்பிடிக்கும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை எனவும் இவர்களுக்கு இந்திய கடற்படை மூலம் புயல் எச்சரிக்கை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தமிழகம் மற்றும் புதுவையில் நாளை ஞாயிற்றுக்கிழமை சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து நான்கைந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த நான்கைந்து நாட்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடல் காற்று பலமாக வீசும் எனவும இதனால் மீனவர்கள் குமரி, அரபிக்கடல் பகுதியில் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது