குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டத்தில் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை பத்து மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரி வளாகத்திற்குள் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
அலுவலகத்தினை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்டவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நெல், சோளம், கச்சான், பெரிய வெங்காயம், போஞ்சி, ஆகிய ஆறு பயிர்களுக்கும் தற்போது காப்புறுதி வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் வாழை, சின்ன வெங்காயம், உழுந்து உள்ளிட்ட பயிர்களையும் காப்புறுதி திட்டத்திற்குள் உள்வாங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விவசாய அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.