ஜம்மு காஷ்மீரில் சுமார் 300 தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் எனவும் மேலும் 250 தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ எல்லைப்பகுதிக்கு அருகே பதுங்கியுள்ளனர் எனவும் இந்திய ராணுவ அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் ஏ.கே.பட் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்துக்கு சென்ற ஏ.கே.பட் அங்கு செய்தியாளர்களை சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுத்து நிறுத்த ராணுவம் விழிப்புடன் இருக்கிறது எனவும் ராணுவத்தினரின் முயற்சிகளுக்கு எல்லைப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் எனவும் தெரிவித்த அவர் காஷ்மீரில் முற்றிலுமாக பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த விரும்புகிறோம் எனவும் தெரிவித்துள்ள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் காவல்துறை, மத்திய ரிசர்வ் காவல்துறையினருடன் இணைந்து பகுதிவாரியாக பயிற்சி ஒத்திகை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.