யாழ்.வடமாராட்சி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியினை மேற்கொண்டார்கள் எனும் குற்றசாட்டில் இரு பெண்களை நெல்லியடி காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
வடமராட்சி துன்னாலை பகுதியில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக நெல்லியடி காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை காலை குறித்த வீட்டினை காவற்துறையினர் முற்றுகையிட்ட போது , வீட்டில் இருந்த ஆண் ஒருவர் தப்பி சென்ற நிலையில் வீட்டில் இருந்த இரு பெண்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் குறித்த வீட்டினுள் காவற்துறையினர் தேடுதலை மேற்கொண்ட போது , 115 லீட்டர் கோடா , 10 லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவற்றை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அதனை அடுத்து கைது செய்யப்பட்ட இரு பெண்களையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நெல்லியடி காவற்துறையினர் காவற்துறை நிலையம் கொண்டு சென்று, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை தப்பி சென்றவரை கைது செய்வதற்கான முயற்சிகளையும் காவற்துறையினர் முன்னெடுத்து உள்ளனர்.