ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் நாலக த சில்வாவும் வெ ளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்விருவரும், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகிய போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
நாலக்க டி சில்வாவும் நாமல் குமாரவும் நீதிமன்றில் முன்னிலையாகினர்…
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், பிரதி காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா, ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமனறில் முன்னிலையாகியுள்ளனர்.
நாலக டி சில்வா, நாமல் குமார ஆகியோரை நீதிமன்றில் இன்று (08.10.18) முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 5 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
இலங்கை அரச தலைவர்களை கொலை செய்வதற்கான சூழ்ச்சி இருப்பதாக நாமல் குமாரவால் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில் பிரதி காவற்துறை மா அதிபர் நாலக்க டி சில்வா பேசியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.