அணு ஆயுதங்களுடன் 1300 கிலோமீற்றர் தூரம்வரை சென்று தாக்கும் அதிநவீன கவுரி ஏவுகணை (Ghauri-missile) யை இன்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் உள்நாட்டு தயாரிப்பான பயங்கர போர் ஆயுதங்களுடன் சுமார் 700 கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் ‘பாபர்’ ஏவுகணையை பாகிஸ்தான் பரிசோதித்திருந்த நிலையில் இன்று அதிநவீன ‘கவுரி’ ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இன்றைய ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி; டொக்டர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் பாராட்டு தெரிவித்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது