157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உள்ள தங்குமிடங்களை பதிவு செய்யுமாறு யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு அறிவுறுத்தியுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வர்த்தக அல்லது சேவை நோக்கில் நீண்ட காலம் மற்றும் குறுகியகால அடிப்படையில் விடுதிகள், சிறிய விடுதிகள், விடுதியாக பயன்படுத்தப்படும் வீடுகள், உள்ளிட்ட தங்குமிடங்களை சபையின் நடைமுறைக்கு ஏற்பட எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Spread the love