206
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் தொடர் விசாரணையாக மேற்கொள்வதற்கு விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கோத்தபாய ராஜபக்ஸ இன்று காலை மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகிந்த நிலையிலேயே நீதிமன்றம் இவ்வாறு தீர்மானித்துள்ளது.
டீ.ஏ. ராஜபக்ஸநினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டமை தொடர்பான வழக்கில் அவர் இன்று விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகியிருந்தார்.
இந்நிலையில் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் நான்காம் திகதி முதல் தொடர்ச்சியாக விசாரணை செய்ய விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love