ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் மீண்டும் கொழும்பு மேல்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி; மாதம் 22ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக போலியான ஆவணமொன்று ஊடகங்களின் முன்னிலையில் காண்பித்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யட்ட வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளிநாடு சென்றுள்ள காரணத்தால் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாக முடியாது என ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமது செயலாளர்கள் ஊடாக எழுத்து மூலம் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியதனையடுத்து இருவரையும் எதிர்வரும் ஜனவரி 22ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது