வடக்கில் செயலமர்வுகள் ஆரம்பம்.
ஜெசாக் நிறுவனமானது USAID-SDGAP நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் பெண்களினை அரசியலில் பங்காளிகளாக்குகின்ற செயற்பாட்டின் ஒரு பகுதியாக யாழ் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 25 அரசியலில் ஆர்வமுள்ள பெண்களுக்கான பயிற்சி நெறி கடந்த வாரம் யாழ்ப்பாணம் TCT மண்டபத்தில் இடம்பெற்றது.
நிறுவன இணைப்பாளர். ந.சுகிர்தராஜ் தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக பிரபல அரசியல் ஆய்வாளர். நிலாந்தன் கலந்து கொண்டு பெண்களை அரசியலில் ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துக்களை வழங்கினார்.
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவுள்ளமையினால், அவர்களிற்கான சாதகமான அரசியல் தளத்தினை அமைக்கவேண்டிய தேவையும் அவர்களது தற்துணிவை ஊக்கு விக்கவேண்டிய தேவையும் சிவில் சமூக அமைப்புகளுக்குண்டு. என்ற வகையிலும் ”அரசியலில் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம் இலங்கையில் நியாயமான மற்றும் பொறுப்பு உணர்வு மிக்க அரசியல் பிரதிநிததித்துவத்திற்கான ஒரு தளத்தினை உருவாக்குதல் ” என்ற கோட்ப்பாட்டில் ஜெசாக் நிறுவனம் USAID/SDGAP இன் நிதியனுசரணையில் கிராமமட்ட விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் திட்டமிடப்பட் ட இவ் பயிற்சியில் யாழ் மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த பெண்கள் பங்கு கொண்டு கலந்துரையாடினார்கள் . அரசியல் பங்களிப்பில் உள்ள சட்டங்கள், அடிப்படை பிரச்சனைகள், பெண்கள் பிரதிநிதி துவத்தின் அவசியம் , சவால்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் கொழும்பைச் சேர்ந்த சட்டவாளர் அபிராமி வன்னியசிங்கம் டிசில்வா கலந்துரையாடலினை மேற்கொண்டார். இப் பயிற்சியானது வடமாகாணத்தில் முல்லைத்தீவு , வவுனியா, கிளிநொச்சி மன்னார் ஆகிய இடங்களிலும் இடம்பெறவுள்ளமையுடன் பிரதேசங்கள் தோறும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் எதிர்காலத்தில் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதனை அதிகரிக்கும் வகையில் தொடர்ந்தும் பாயிற்சிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
தொகுப்பு. மற்றும் படங்கள்
யாழ்.தர்மினி பத்மநாதன்