161
கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று மாலை 05.30 மணியளவில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறினார். தற்போதைய அரசியல் நிலமை மற்றும் பொறுப்பு அரசாங்கம் அமைப்பது சம்பந்தமாக கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலுக்காக அரசாங்கத்தில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love