குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு , புனர்வாழ்வோ வேண்டாம். அவர்கள் அனைவரும் நிபந்தனையற்ற ரீதியில் விடுவிக்கப்பட வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை ம.சக்திவேல் கோரியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் , அனுராதபுர சிறைச்சாலையில் 11 அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களின். அரசியலைக்கு தமது வாழ்வை அர்ப்பணித்து இன்று சிறையில். வாடுகின்றனர் இவர்களின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. தற்போதைய ஜனாதிபதி வாக்குறுதிகளை அள்ளி வழங்கி இருந்தார் . மூன்றாண்டுகளுக்குப் மேலாகியும் விடுதலை இல்லை. இவர்கள் சாவை தழுவ கூடாது. ஏனெனில் அவர்கள். தமிழர்கள் வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கம் மன்னிப்பு வழங்க வேண்டும் என கேட்கிறார். அவர்களுக்கு மன்னிப்பு தேவையையில்ல நிபந்தனையற்ற விடுதலையை கோருகின்றோம்
அதே போல புனர்வாழ்வு அளிக்க கோருகின்றனர். தமிழ் மக்களின் அரசிலுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு தான் புனர்வாழ்வு கொடுக்க வேண்டும். தமிழ் மக்களின் அரசியலுக்காக செய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு தேவையில்லை.
அதேபோன்று அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் எனும் கோரிக்கை முன் வைக்கப்பட்டு உள்ளது. அனைவருக்கும் பொது மன்னிப்பு என்றால் இராணுவ தரப்பு யுத்த குற்றம் புரிந்தமையை ஏற்றுக்கொள்ளப்படுகின்றாதா ? அவ்வாறு எனில் யுத்த குற்றம் புரிந்தமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா ? குற்றவாளிகளாக இனம் காணப்பட்டனரா ? சிறைகளில் உள்ளனரா ? இல்லை அவ்வாறு இருக்க தமிழ் அரசியல் கைதிகளை பலிக்கடாவாக்கா முயல்கின்றனரா ?? போன்ற கேள்விகள் எழுகின்றன.
யுத்த குற்றம் என்பது இராணுவத்துடன் தொடர்புபட்டது. அதற்கு இராணுவ சட்டதிட்டங்கள் ஊடாகவோ , சர்வதேச சட்டங்கள் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.அதனை விடுத்து யுத்த குற்றம் புரிந்தவர்களை அரசியல் கைதிகளோட ஒப்பிட வேண்டாம்.
அதேவேளை கடந்த ஆண்டு வரவு செலவு திட்டம் விவாதத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் கைதிகள். விடயத்தை நிபந்தனையாக முன் வைத்து ஆதரவை வழங்கி இருக்கலாம் ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 கோரிக்கையை முன் வைத்தோம் எனவும். அதில் அரசியல் கைதிகள் விடுதலை ஒன்று எனவும் அதனை பிரதமர் ஏற்றுக்கொண்டார் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அரசியல். கைதிகள் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கும் போது அது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லலை
இந்நிலையில் ஒட்டுமொத்த தமிழ் சார்பில் கோருகின்றோம் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்போது அரசியல் கைதிகள் விடுதலையை முன்னிறுத்த வேண்டும் என கோருகின்றோம். என தெரிவித்தார்.