178
தென்னாபிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான அணியிலிருந்து தென்னாபிரிக்க அணியின் சிரேஸ்ட சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹீர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தொடரின் முதலாவது போட்டியில் தாஹீர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த நிலையில், அணியிலுள்ள ஏனைய சுழற்பந்துவீச்சாளரான தப்ரைஸ் ஷம்சியை பரிசோதிக்கும் வகையிலேயே தாஹீர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் எனத் n தெரிவிக்கப்படுகின்றது. இத்தொடரின் இரண்டாவது போட்டி, பொச்சர்ஸ்போர்மில் இலங்கை இன்றையதினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love